Contact

Contact: K.S.SUNDARA RAJAN : (+91 ) 98949 20196

1 Dec 2015

மதுரையில் நமது வகுப்புகள் ........



நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
#மதுரை மாநகரில் நமது வகுப்புகள் டிசம்பர் 6 ம் தேதி முதல் ஆரம்பம் !
மூன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது ( Dec – 6,13,20  )
TAMILNADU ASTRO - LOGICAL INSTITUTE (TALI ) BATCH – 19 AT MADURAI.
நமது TALI METHOD “ Prediction”  Based on Dasa Bhuthi ! (பாரம்பரியம் முறை, 12  எளிமையான விதிகள் மட்டுமே)
வகுப்புகள் விபரம்:
#முதல் நாள் : TALI METHOD  12 விதிகளை பயன்படுத்தும் பயிற்சி !
#இரண்டாம் நாள் :நவீன பாவக காரகங்கள் மற்றும் பலன்கள் லாஜிக் !
#மூன்றாம் நாள் : பாவக பலன் நிர்ணயம், அஷ்டகவர்க்கத்தில் தேவையான விஷயங்கள், கடிகார பிரசன்னம், பல உதாரண ஜாதகங்கள்...
ஒரு ஜாதகத்திற்கு பலன் கூறுவதில் தசா புத்தியின் பங்கு மிக முக்கியமானது. நமது Tali Method  வெறும் 12 விதிகளை மட்டுமே உள்ளடக்கியது ஆகும். இந்த விதிகளை கொண்டு எப்படி தசா புத்திக்கு பலன் கூறவேண்டும் என்பதினை, மூன்று ஞாயிற்றுகிழமைகளில், நேரடி வகுப்பு மூலம் கற்று தருகிறோம். விதிகளையும், விதிகளை கொண்டு எப்படி பலன் கூறுவது என்பதினையும், பல உதாரண ஜாதகங்கள் மூலம் தெளிவாக கற்று தருகிறோம். பாரம்பரிய முறையில் உள்ள பாவகச் சக்ரம் மட்டும் எடுத்துக்கொள்ள படுகிறது. (உப நட்சத்திரம் எல்லாம் கிடையாது)
2012 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல்
திருச்சி, சென்னை, நாகர்கோயில், கரூர், கோவை, சேலம்  
ஆகிய ஆறு மாவட்டங்களில் நமது வகுப்புகள் நடைபெற்று வருகிறது,
இதுவரை நமது TALI முறையினை #372  ஜோதிடர்கள் மற்றும் ஜோதிட ஆர்வலர்கள் படித்து இருக்கிறார்கள்.

ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்களுக்கு நிச்சியமாக நமது வகுப்பு நல்ல அடித்தளமாக அமையும். நமது விதிகளை எப்படி கையாளுவது என்பதினை தெரிந்து கொண்டால் முதலில் உங்கள் ஜாதகதிற்க்கான பலன்களை நீங்களே அறிந்து கொள்ளலாம், பிறகு படிப்படியாக மற்றவர்கள் ஜாதகத்திற்கும் தைரியமாக பலன் சொல்ல முடியும்.
நமது முறையினை கொண்டு சுலபமாகவும், துல்லியமாகவும் பலன்கள் கூற முடிகிறது என்பது நமது மாணவர்களின் கருத்து ஆகும். ஒரு ஜாதகத்திற்கு பலன் சொல்வதிற்கு தேவையான அடிப்படை விஷயங்கள் கண்டிப்பாக சொல்லி கொடுக்கப்படும். நமது முறைக்கு தேவையான கணிதங்கள் Astrology Software மூலம் பாவகமும், தசாபுத்தியும் எடுத்துக்கொள்ள முடியும், என்பதால் இங்கு ஜாதக கணிதம் சொல்லி தரப்படுவதில்லை. ஜாதக கணிதம் போன்ற விஷயங்களை நீங்கள் தேவை என்றால் பின்னர் படித்து தங்கள் கணித அறிவினை வளர்த்துக்கொள்ளலாம். எல்லோராலும் தொடர்ந்து படிக்க வர முடிவதில்லை, அதனால் காலத்தின் அருமை கருதியே குறைந்த நாட்களில் நமது வகுப்புக்கள் நடத்தப்படுகிறது.

நமது TALI முறை படித்தாலும் ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒவ்வொரு பாடம் படிக்க முடியும் என்பதால், அடிக்கடி வகுப்புக்களுக்கு வரச்சொல்லி மாணவர்களிடம் இருந்து பணம் வாங்க எனக்கு விருப்பம் இல்லாத காரணத்தினால். Face Book ல்
TALI DASA BHUTHI GROUP,
TALI THIRUMANA PORUTHAM GROUP,
TALI MEDICAL ASTROLOGY GROUP,
TALI NUMEROLOGY GROUP,
TALI NADI ASTROLOGY GROUP
போன்ற குழுக்களை ஏற்படுத்தி தினம் ஒரு ஜாதகம் என்ற அடிப்படையில், உதாரண ஜாதகம் ஒவ்வொன்றாக போட்டு மாணவர்களை பலன் சொல்ல பயிற்சி அளித்தும் வருகிறேன்.

தேநீர், உணவு தங்கள் செலவுதான். முன்பதிவு அவசியம்!
#மதுரையில் வகுப்புகள் நடைபெறும் இடம் குறித்த தகவல் முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு மட்டும் தெரியப்படுத்தப்படும்.
அன்புடன் K.S. சுந்தர ராஜன், திருச்சி : 98949 20196.