Contact

Contact: K.S.SUNDARA RAJAN : (+91 ) 98949 20196

29 Jul 2014

தாயாருக்கு ஏன் நான்காம் பாவகத்தை வைத்து உள்ளோம்?



இனிய நண்பர்களே,
நம் தாயாருக்கு ஏன் நான்காம் பாவகத்தை வைத்து உள்ளோம்?
லக்னம் என்பது, ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் கிழக்கு அடிவானத்தில் உதயம் ஆகும் இராசியே லக்னம் என எடுத்துக்கொள்கிறோம்.
7 ம் பாவம் என்பது ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் மேற்கு அடிவானத்தில் இருக்கும் இராசி ஆகும்.
10 ம் பாவம் என்பது ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் உச்சியில் உள்ள இராசியை குறிக்கும்.
4 ம் பாவம் என்பது பூமியின் மத்திம பகுதியை, அதாவது பாதாளத்தை குறிக்கும். (பூமிக்கு பின் பகுதியில் உள்ள இராசியையும் எடுத்துக் கொள்ளலாம்)
பூமி என்பது சூரியனில் இருந்து வந்த ஒரு தீ பிழம்பே ஆகும். இன்னும் பூமியின் மத்திம பகுதியில் தீ பிழம்பு உள்ளது. இந்த பூமியில் மட்டுமே உயிர்கள் வாழ்வதற்கு தேவையான பஞ்ச பூத சக்தி ஒரு அளவுடன் இருக்கிறது. எனவே மனித குலம் தோன்றுவதற்கு பூமியே காரணம். பூமிக்கு இன்னும் ஒரு காரகம் உற்பத்தி செய்தல். இந்த உலகில் உள்ள அணைத்து இயற்கை வளங்களும் பூமியினாலேயே உண்டானது. உற்பத்தி செய்த காரணத்தாலே நாம் பூமியை “பூமித்தாய் மற்றும் “பூமி மாதா என்று அழைக்கிறோம்.
அதேபோல் தகப்பனாரின் உயிர் அணுவினை, தனது கற்ப்பபையில் சுமந்து, தனது இரத்தத்தினால், நமது உடல் உறுப்புக்களை பாரபட்சம் பார்க்காமல் உற்பத்தி செய்து, நம்மை இந்த பூமியில் அவதரிக்க செய்த தாய்க்கும் 4 ம் பாவத்தை அளித்து உள்ளோம்.
எனவே நம் முன்னோர்கள் தாய், நிலம், பூமியில் உள்ள அசையும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் நான்காம் பாவக காரகதுவங்களாக வைத்து உள்ளனர்.  
எனக்கு தெரிந்த அளவில் பதிவு செய்து இருக்கிறேன், தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன். எனது கருத்து சரியாக பட்டால் Share செய்யுங்கள்.
நன்றி ! K.S. சுந்தர ராஜன், திருச்சி, செல்: 98949 20196.

No comments:

Post a Comment