Contact

Contact: K.S.SUNDARA RAJAN : (+91 ) 98949 20196

10 Feb 2014

வினாடி 10



அனைவருக்கும் காலை வணக்கம் ,
ராகு மற்றும் கேது ஒரு விளக்கம் ............
இந்திய ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது மிக முக்கியமாக கருதப் படுகிறது. ஒரு ஆண் ஜாதகமோ அல்லது ஒரு பெண் ஜாதகமோ திருமணத்திற்கு என்று எடுத்து விட்டால் போதும் பல விதமான தோஷங்களை கூறிவருகிறோம், அதாவது செவ்வாய் தோஷம், புத்திர தோஷம், களத்திர தோஷம், ஆயுள்/மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம், நாக தோஷம் இன்னும் பல வரிசை படுத்திக்கொண்டே போகலாம். இதில் வேடிக்கை என்னவெனில் ஒன்பது கோள்களில் செவ்வாய் தோஷத்தை தவிற மற்ற அனைத்து தோஷங்களும் ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு கோள்களை கொண்டே கூறிவருகிறோம்.
இந்த தோஷங்கள் உண்மையாகவே செயல்படுகிறதா அல்லது தோஷங்களை கூறி, அதற்காக பரிகாரம் செய்ய சொல்லி மக்களிடம் பணம் சம்பாதிக்க படுகிறதா என்பதினை பின்னர் பார்க்கலாம். நமது TALI முறைப்படி தோஷங்கள் ஆனாலும் சரி யோகங்கள் ஆனாலும் சரி இதனை தீர்மானம் செய்வது நடப்பு தசா புத்தியே ஆகும். பல அரச யோக ஜாதகங்களில் தீய தசாபுத்தி நடக்குமேயானால் யோகங்களை வெளிபடுத்த இயலாது. அதேபோல் தோஷமான ஜாதகங்களில் நல்ல தசாபுத்தி நடக்குமே அனால் தோஷங்கள் வெளிப்படாது.
சரி நமது தலைப்புக்கு வருவோம் ராகு மற்றும் கேதுவால் யோகங்கள் அல்லது தோஷங்கள் எதுவாயினும், ராகு கேது வானவீதியில் எங்குள்ளது என்றால் முதலில் இது நாம் கண்ணால் பார்க்ககூடிய ஒரு உண்மையான ஒரு கோள் இல்லை. இது வெறும் வெட்டுபுள்ளி மட்டுமே. இந்த வெட்டு புள்ளி எங்கே உள்ளது என நானும் பல ஜோதிட அறிஞர்களிடம் கேட்டு இருக்கிறேன் யாரிடமிருந்தும் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. சில கேள்விகளுக்கு உடனே பதில் கிடைக்கும். சில கேள்விகளுக்கு பதில் கிடைக்க வெகுகாலம் ஆகும். அதே போல் இந்த ராகு கேது வெட்டு புள்ளியை புரிந்துகொள்ள சிறிது காலம் ஆனது. கீழே உள்ள படத்தை பார்த்தால் தங்களுக்கும் புரியும். 

அதாவது சூரிய குடும்பத்தில் முதல் சுற்று பாதையில் புதனும், இரண்டாம் சுற்று பாதையில் சுக்ரனும், மூன்றாம் சுற்று பாதையில் பூமியும் உள்ளது என தங்களுக்கு தெரியும். அதேபோல் பூமியினுடைய இயற்கை கோளான சந்திரன் பூமியை சுற்றி வருகிறது. பூமியினுடைய சுற்று பாதையும் சந்திரனுடைய சுற்று பாதையும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெட்டும், இதில் வடக்கு வெட்டு புள்ளியை ராகு என்றும் தெற்கு வெட்டு புள்ளியை கேது என்றும் அழைக்கிறோம்.
                    அன்புடன் K.S. சுந்தர ராஜன் 

1 comment: