Contact

Contact: K.S.SUNDARA RAJAN : (+91 ) 98949 20196

7 Feb 2014

வினாடி 8

அனைவருக்கும் வணக்கம் !

நமது துன்பத்திற்கு காரணம் நான்காம் பாவகமே !


               பொதுவாக நாம் இருப்பதை கொண்டு திருப்திபடுவதே இல்லை . காரணம், நம்மை நாம் எப்போதும் அடுத்தவருடன் ஒப்பிட்டு பார்த்துக்கொண்டே இருக்கிறோம் . பணம்தான் அணைத்து இன்பம் மற்றும் துன்பத்திற்கு காரணமாக அமைகிறது . பணம் சம்பாதிக்கவேண்டும் என்றால் நாம் பல சந்தோஷங்களை தியாகம் செய்தே ஆகவேண்டும் .
                        உதாரணமாக , நமது நெருங்கிய உறவுகளை விட்டு பிரியநேரிடும் அல்லது அவர்களை பாரமாக நினைக்க தோன்றும் . அசையும் , அசையா சொத்துக்கள் சேர்க்கவேண்டும் என்றால் ( 4 ம் பாவகம் ) நமது காதல், உல்லாசம் , பொழுதுபோக்கு , குழந்தைகள் மூலம் கிடைக்கும் சந்தோசம் , இயற்கையை பாதுகாக்கும் எண்ணம், பொது அறிவினை வளர்துக் கொள்ளுதல் ஆகிய அனைத்தையும் தியாகம் செய்தாக வேண்டும் (5 ம் பாவகம் ). இன்று உலகில் இயற்கை சூழல் அழிந்து வருவதற்கு முக்கியமான காரணம் ஒவ்வொரு மனிதனின் சொத்து குவிப்பு ஆசையே காரணம் . ஒரு விஷயத்தை நாம் நினைவில் கொள்ளவேண்டும் பணத்துடன் நோயும் சேர்ந்தே வருகிறது மறைமுகமாக .
                    மனிதனுக்கு அடிப்படை தேவைகளான உண்ண உணவு , உடுக்க உடை , இருக்க ஒரு வீடு என்று மட்டும் வாழ்ந்து வந்தால், இயற்கையுடன் ஒன்றி சிறப்பாக வாழமுடியும் . நோய்யற்ற வாழ்வே குறையற்ற செல்வம் ஆகும் .   70  முதல் 80 வயது வரை மற்றுமே வாழக்கூடிய இந்த வாழ்கையை அதிக ஆசையில்லாமல் இயற்கையுடன் ஒன்றி ஒவ்வொரு நாளையும் ரசித்து, ருசித்து வாழ கற்றுகொள்வோம் . சொர்க்கம், நரகம் வேறெங்கும் இல்லை . இந்த பூமி தான் சொர்க்கம், நரகம் ஆகும் . நாம் இயற்கையுடன் வாழ்ந்தால் சொர்க்கம் , செயற்கையுடன் வாழ்ந்தால் நரகம் ஆகும் .எனவே நியாயமான  ஆசையுடன் வாழ்வோம் , பிற மனிதர்களையும் நம்மை போலவே பாவித்து அவர்களையும் வாழச்செய்வோம். 
                                                               அன்புடன்  K.S. சுந்தர ராஜன் .

No comments:

Post a Comment