Contact

Contact: K.S.SUNDARA RAJAN : (+91 ) 98949 20196

8 Feb 2014

வினாடி 9

அனைவருக்கும் காலை வணக்கம் ,

 ஒரு முக்கியமான கேள்வி , அதாவது அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்புக்கு ஜோதிடர் நேரம் குறித்து கொடுக்கலாமா ? இது சரியா ?



             ஜோதிடத்தின் மீது நம்பிக்கை உடையவர்கள் மட்டும்தான் ஒரு குழந்தை பிறபதற்கு முன்பு அவர்கள் நம்பிக்கைக்குரிய ஜோதிடரை அணுகி நல்ல நேரம் குறித்து தாருங்கள் என கேட்கின்டனர் . அதாவது நல்ல நேரத்தில் தங்களுக்கு குழந்தை பிறந்தால் மொத்தக் குடும்பத்திற்கும் நல்லது நடக்கும் என்பது அவர்களது நம்பிக்கை . சுக பிரசவம் நடந்தால் நாம் ஒன்றும் செய்ய முடியாது அது கடவுளின் செயல் என எடுத்துக்கொள்கிறோம் . அனால் சில நேரங்களில் சுக பிரசவம் நடக்க வாய்ப்பு இல்லை, அறுவை சிகிச்சை தான் செய்யவேண்டும் எனவே உங்கள் ஜோதிடரிடம் நல்ல நேரம் குறித்து வாருங்கள் என மருத்துவர்களே கூறுகிறார்கள் . இன்னும் சில பெற்றோர்கள் சுக பிரசவத்திற்கு வாய்ப்பு இருந்தாலும் நல்ல நேரம் குறித்து தருகிறோம் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுத்து விடுங்கள் என்று கூறும் அளவிற்கு இருக்கிறார்கள் .
              சுக பிரசவம் என்பது இயற்கை , அறுவை சிகிச்சை என்பது செயற்கையானது . இந்த செயற்கைக்கு ஜோதிடர் துணை போகலாமா என்பதே கேள்வி . இதற்கு ஜோதிடர்கள் என்ன செய்கிறார்கள் , நல்ல நட்சத்திரமா , நல்ல திதி , ராகு காலம் மற்றும் எமகண்டம் நேரம் இல்லாமல் , நல்ல ஹோரையில் , நல்ல லக்னத்தை தேர்வு செய்து கொடுகிறார்கள் . பொதுவாக எல்லா நட்சத்திரமும் நல்ல நட்சதிரம்தான் , அனால் சமிபகாலமாக மூலம் , ஆயில்யம் , கேட்டை ,விசாகம் ஆகிய நட்சதிரங்கள் புகுந்த வீட்டில் உள்ளவர்களை பாதிக்கும் என்று கூறிவருகிறார்கள் . இந்த கூத்து உண்மையா என்று இன்னும் ஒரு கட்டுரையில் விவாதிப்போம் . குழந்தை எந்த நட்சத்திரத்திலும் பிறக்கலாம் , அனால் லக்னமே மிக முக்கியமாக ஜோதிடர்கள் பார்க்க வேண்டும் . TALI முறைப்படி குறிக்கப்படும் லக்னத்திற்கு 8 மற்றும் 12  ல் கோள்கள் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே போதும் .
           சரி நமது கேள்விக்கு வருவோம் , இது சரியா , தவறா ? எந்த குழந்தைக்கு நேரம் குறித்து அறுவை சிகிச்சை மூலம் வெளியே வரவேண்டும் என்று தலையில் எழுதி இருகின்றதோ அந்த குழந்தைதான் குறிப்பிட்ட நேரத்தில் வெளியே வரும் , மற்றவை நாம் குறிக்கின்ற நேரத்தில் வராது பல காரணங்களால் மாறிவிடும் . எனவே நேரம் குறித்து தருவதில் தவறில்லை .
                          நன்றி !  அன்புடன்  - K.S. சுந்தர ராஜன் .

2 comments:

  1. The birth time is a predetermined one and can not be decided by man even though it appears to be.The Sanchitha karma of the child is fixed by the combined effect of the karma of Father and Mother.
    The Famous Tamil saint in his Thiumanthiram in 453 rd verse stated that
    " the life of the soul is decided/fixed by the Almighty at the time of the
    union of the parents of the child.
    S.Sekar

    ReplyDelete
    Replies
    1. Sekar Sir, You are Right its a Predetermined One.

      Delete