Contact

Contact: K.S.SUNDARA RAJAN : (+91 ) 98949 20196

28 Feb 2014

வினாடி 19



அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,
மூலம், ஆயில்யம், கேட்டை, விசாகம் ஆகிய நட்சத்திரங்கள் தோஷமா?

முதலில் 27 நட்சத்திரத்தில் எந்த நட்சத்திரத்திற்கும் உறுதியாக தோஷம் கிடையாது. சூரியனும் ஒரு நட்சத்திரம் தான். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனை ஒரு கோள் என்று நமது முன்னோர்கள் எடுத்துக் கொண்டதால் நாமும் அதையே பின்பற்றுகிறோம். சூரியனை ஒன்பது கோள்கள் சுற்றி வருகிறது, பூமியில் இருந்து பார்த்தால், ஒன்பது கோள்களும் பூமியை சுற்றி வருகிறது போன்ற தோற்றத்தை அளிக்கும். ஒன்பது கோள்ளுக்கும் வெளியே பால் வீதி உள்ளது. இந்த பால் வீதியில் மற்றும் அதற்கு வெளியேயும் ஆயிரகணக்கான நட்சத்திர கூட்டங்கள் உள்ளன. இதில் சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் செல்லும் பாதையில் உள்ள நட்சத்திரங்களை மட்டுமே  நாம் ஜோதிடத்தில் எடுத்துக்கொள்கிறோம். 360 பாகையில் உள்ள நட்சத்திரங்களை, ஒரு நட்சதிரத்திற்கு  பாகை 13.20 விநாடி என தோராயமாக நிர்ணயம் செய்துவிட்டனர்.
இந்த 27 நட்சத்திரத்தில் ஒன்பது கோள்களும் பயணிக்கும். அதாவது பூமியில் இருந்து பார்க்கும் பொழுது ஒரு கோளுக்கு பின்னால் எந்த நட்சத்திரம் இருக்கிறதோ அதையே கோள் நின்ற நட்சத்திரம் (பாதாசாரம்) என ஜாதகத்தில் குறிக்கப்படும். இந்த  நட்சத்திரங்களுக்கு அஸ்வினி முதல் ரேவதி வரை 27 பெயர்கள் உள்ளன, அதில் மூலம், ஆயில்யம், கேட்டை, விசாகமும் அடங்கும். இதில் இருந்து என்ன புரிந்து கொள்ளவேன்டும் என்றால் ஒன்பது கோள்களும் 27 நட்சத்திரத்தில் பயணிக்கும். இந்திய ஜோதிடத்தில் சந்திரன் பயணிக்கும் நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரம் என எடுத்துக்கொள்கிறோம், சந்திரன் இருக்கும் ராசியை ஜென்ம ராசி என எடுத்துக்கொள்கிறோம்.
சந்திரன் மனோகாரகன், உடல்காரகன் ஆகும். ஒரு ஜாதகரின் எண்ணம், சிந்தனை, கனவுகள் எப்படி இருக்கும் என்று பலன் கூற மட்டும்தான் சந்திரன் நின்ற நட்சத்திரம், இராசி பார்க்க படுகிறது. அதேபோல் கோச்சார பலன் பார்க்கவும் ஜென்ம இராசி எடுத்துக்கொள்ளபடுகிறது. ஜோதிட வரலாற்றில் எந்த புத்தகத்திலும் சந்திரன் நின்ற நட்சத்திரத்திற்கும் மாமனார், மாமியார், கொழுந்தன், மைத்துனன் ஆகியோருக்கு தொடர்பு ஏற்படுத்தி பலன் கூறப்படவில்லை. அதேபோல் ஒரு ஜாதகத்தை கொண்டு அந்த ஜாதகரை தவிர மற்ற எவருக்கும் பலன் கூற முடியாது, சரியாகவும் வராது. எனவே ஒன்பது கோள்களும் மூலம், ஆயில்யம், கேட்டை, விசாகம் ஆகிய நட்சத்திரத்தில் செல்லும். சந்திரனை நிலையை மட்டும் எடுத்துக்கொண்டு மூலம், ஆயில்யம், கேட்டை, விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தால் மாமனார், மாமியார், கொழுந்தன், மைத்துனன் ஆகியோருக்கு ஆகாது என்ற எண்ணத்தில் இருந்து மீண்டுவருவோம்.
எதோ ஒரு குடும்பத்தில் ஒரு மருமகள் வந்த நேரம் மாமனாரோ, மாமியாரோ அவர்களுடைய சொந்த ஜாதகத்தில் ஆயுள் முடிந்து இறந்து பொய் இருக்கலாம், அதற்காக அந்த மருமகள் வந்த நேரம்தான் என்று நாம் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஒவ்வொரு விதியை உருவாக்கிய காரணத்தால் இன்று ஜோதிடம் குப்பையாக உள்ளது. பொதுவிதிகளை முறைபடுத்தி பலன் கூறினால் ஜோதிட கலை வளரும். ஒவ்வொரு ஜாதகத்திற்கும் விதிவிலக்கு, புதியவிதி என்று ஏற்படுத்தி கொண்டே போனால் ஜோதிடம், ஜோதிடர்களுக்கே புரியாத புதிராக மாறிவிடும் என்பது எனது தாழ்மையான கருத்து.
ஆயிரம், லட்சம், கோடி பெண்கள் - மூலம், ஆயில்யம், கேட்டை, விசாகம் நட்சத்திரங்களில் பிறந்து, திருமணமாகி  20, 30 ஆண்டுகள் வரை மாமனார் , மாமியார் உயுருடன் இருந்து இருக்கிறார்கள், இன்னும் இருந்தும் வருகிறார்கள். சமீப காலமாக 90 சதவீத ஜோதிடர்கள் இந்த நட்சத்திரங்கள் பாதிக்காது என்று உறுதி அளித்தாலும், பொது மக்களிடம் தான் பயம் உள்ளது. இந்த பயத்தை போக்க வேண்டியது ஜோதிடர்களின் கடமை ஆகும். எனவே எந்த நட்சத்திரதிற்கும் தோஷம் இல்லை என கூறி இக்கட்டுரையை நிறைவு செய்கின்றேன். நன்றி !
                அன்புடன் K.S. சுந்தர ராஜன்

2 comments:

  1. I fully agree to this. We should never discriminate/neglect any jadhagam just for reason that it is one among Moolam, Ayilyam, Kettai & Visagam nakshatrams. I have always been mentioning this to my friends.

    ReplyDelete
  2. I completely agree. We should never discriminate or neglect any jadhagam just for the reason that it belongs to one of Moolam, Aayilyam, Kettai or Visagam nakshatrams. I am also sharing this info to my friends and collegues.

    ReplyDelete