Contact

Contact: K.S.SUNDARA RAJAN : (+91 ) 98949 20196

13 Feb 2014

வினாடி 13



அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,
செவ்வாய் தோஷம்  : பகுதி - 1

இந்திய ஜோதிடத்தில் உண்மை கோள்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி ஆகிய ஏழு கோள்களுடன் ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு கோள்களையும் சேர்த்து மொத்தம் ஒன்பது கோள்களை எடுத்துக்கொண்டு பலன் கூறி வருகின்றோம். இதில் செவ்வாய் ஒரு கோளுக்கு மட்டும் தான் செவ்வாய் தோஷம் என்று கூறுகிறோம், மற்ற கோள்களை வைத்து சூரியன் தோஷம் என்றோ சனி தோஷம் என்றோ கூறுவதில்லை.
செவ்வாய் தோஷம் என்றால் என்ன ?
ஒரு ஆண் அல்லது பெண் பிறந்த ஜாதகத்தில், லக்னத்திற்கு   2,4,7,8,12  ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் என்று கூறுகிறார்கள். மேலும் சந்திரன் மற்றும் சுக்க்ரனுக்கு 2,4,7,8,12 ல் செவ்வாய் இருந்தாலும் செவ்வாய் தோஷம் என்று கூறுபவர்களும் உண்டு. செவ்வாய் தோஷம் உண்டா இல்லையா என்பதை ஜோதிடர்கள் மத்தியில் ஒரு பட்டி மன்றமே நடத்தினாலும் முடிவு கிடைக்காது. இந்த பிரச்சனையால் பெரிதும் பாதிக்க படுவது பெற்றோர்கள்தான். ஒரு ஜோதிடர் செவ்வாய் தோஷம் உண்டு என்பார், மற்ற ஒரு ஜோதிடர் இல்லை பரிகார செவ்வாய் என்பார். தன் பிள்ளைக்கு செவ்வாய் தோஷம் உண்டா இல்லையா என்ற குழப்பத்துடனேயே பொருத்தமும் பார்த்து வருகின்றனர்.
                 செவ்வாய் தோசத்தின் வரலாறு
     செவ்வாய் தோஷத்திற்கு ஆதி சங்கரசாரியம் என்ற நூலை மேற்கோள் காட்டுவார்கள். அதில் ஆயிரம் செய்யுள்கள் உள்ளன. ஓரிரு இடங்களில் செவ்வாயை பாரு என்று தான் ஒழிய செவ்வாய் தோஷம் கற்பிக்கப்படவில்லை. ஆதி சங்கரர் வழக்கை குறிப்பில் அவர் ஜோதிடம் எழுதியதாக ஒரு குறிப்பும் இல்லை. வட மொழியில் காலபிரகாசிகை என்ற மிக பழமையான நூலில் மனிதனுக்கு தேவையான எல்லா நிகழ்சிகளுக்கும் வழிகாட்டப்படுகிறது, இந்நூலில் செவ்வாய் தோஷத்தை பற்றி எந்த குறிப்பும் இல்லை. மேலும் உத்திரகாலமிர்தம், பலதீபிகை, ஜோதிஷ பிக்ஞான தீபிகை, ஜாதக சாகரம், சுகர் நாடி போன்ற நூல்களிலும் செவ்வாய் தோஷத்தை பற்றி எந்த குறிப்பும் இல்லை. இந்திய ஜோதிடத்தின் தந்தை வராஹமிஹிரர் எழுதிய பிருஹத் ஜாதகம் என்ற நூலிலும் குறிப்பாக ஸ்த்ரி ஜாதக அதியாத்திலும் செவ்வாய் தோஷம் பற்றி எதுவும் இல்லை. எனவே செவ்வாய் தோஷம் என்பது சமீப காலத்தில் தான் வந்துள்ளது.
     ஜாதக சந்திரிகை என்ற வடமொழி நூலை கி.பி. 1920 ம் ஆண்டு பிரம்மஸ்ரீ கடலங்குடி நடேச சாஸ்திரிகள் மற்றும் தேவநாகிரி லிபி இருவரும் சேர்ந்து தமிழில் மொழி பெயர்த்து உள்ளனர். இந்த புத்தகத்தில் தான் செவ்வாய் தோஷம் முதல்முதலில் இடம் பெறுகிறது. காளிதாசனால் இயற்ற பெற்ற மூல ஜாதக சந்திரிகையில் செவ்வாய் தோஷம் என்று கூறப்படவில்லை, செவ்வாயை கவனி என்றுதான் இருக்கும். பல இடைசொருகலில் செவ்வாயும் தோஷமும் ஒரு இடை சொருகல்.  
                                                                  தொடரும் ...
                          அன்புடன் - K.S. சுந்தர ராஜன்

No comments:

Post a Comment