Contact

Contact: K.S.SUNDARA RAJAN : (+91 ) 98949 20196

19 Feb 2014

வினாடி 16



அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,
இராசி / பாவகம் , இதில் எதை வைத்து பலன் கூறுவது?

பொதுவாக நாம் நம் ஜாதக நோட்டில் இராசி மற்றும் நவாம்சம் கட்டம் மட்டும் பார்த்திருப்போம். கிராமங்களில் கணிக்கப்படும் ஜாதகங்களில் நவாம்சம் கட்டம் கூட இருக்காது, இராசி கட்டம் மட்டுமே இருக்கும். இராசி கட்டம் என்றால் அனைவருக்கும் தெரியும், அனால் பாவகம் என்றால் என்ன என்று பல ஜோதிடர்களுக்கே தெரியாத நிலையில் இருக்கிறோம்.
     இராசி கட்டம், இது ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் வானவீதியை ஒரு புகைப்படம் எடுத்தால் என்ன இருக்குமோ, அதையே ஒரு கட்டத்தில் எழுதி வைப்பது தான் இராசி கட்டம். இதைத்தான் தலைவிதி என்று கூறுகிறோம். பிறந்த நேரத்தில் குறிக்கப்படும் இராசி கட்டம் நம் வாழ்நாள் முழுவதும் மாறாதது ஆகும். இது ஒரு பொதுவான அமைப்பு ஆகும். ஏன் என்றால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இந்தியாவில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் லக்னத்தை தவிர அனைத்து கோள் நிலைகளும் ஒரே நிலையில்தான் இருக்கும் (அதாவது ஒரே பாகை கலை தான் வரும்) கண்டிப்பாக இதில் இருக்காது.
     பாவகம் என்றால் புரியும் வண்ணம் கூறவேண்டுமானால் ஊருக்கு ஊர் மாறவிடும், ஏன் என்றால் பாவகம் பூமத்திய ரேகையை பொருத்து அமையும். பாவக கணிதத்திலும் பல முறைகள் பின் பற்றபடுகிறது அவை பாவக ஆரம்ப முறை, பாவக மத்திம முறை ஆகும். இதில் எதை எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதில் முரண்பாடுகளும் உண்டு. இதை விரிவாக பின்னர் அயனாம்சம் தலைப்பில் பார்க்கலாம்.
இராசியை கொண்டு என்ன பலன் கூறலாம் என்று பார்க்கலாம்.
1.       பன்னிரு இராசிகளில் கோள்கள் நின்ற பலன் ( உதாரணம் - மேஷ இராசியில் சூரியன் நின்ற பலன்)
2.       கோள்களின் பலம் ( அதாவது ஆட்சி, உச்சம், நீசம், நட்பு, சமம், பகை )
3.       பாவக அதிபதி
4.       பாவக அதிபதி மாறி நின்ற பலன் (உதாரணம் இரண்டுக்கு உடையவன் ஆறில் நின்ற பலன்)
5.       அரச யோக பலன்கள் .
6.       அனைத்து தோஷங்களும் இராசியை வைத்தே கூறப்படுகிறது.
7.       கோள்கள் இணைவு பலன்கள்.
8.       ஒரு குறிபிட்ட பாவக காரக கோளின் நிலை. ( உதாரணம் புத்ர காரகன் குரு வின் நிலை)
9.       ஜென்ம இராசியை எடுத்துக்கொண்டு, கோச்சார பலன் கூறுவதற்கு.
10.   திருமண பொருத்தம் பார்ப்பதற்க்கு. (தோஷ சாம்யம் பார்க்க)
இன்னும் பல பார்த்து கொண்டு வருகிறோம்.....
ஜாதகம் பலன் கூறுவதில் விதி - மதி இரண்டுமே மிக முக்கியம். இவை இருகண்கள் போல. இராசியை வைத்து விதியை கூறலாம், பாவகத்தை வைத்துத்தான் மதியை கூறவேண்டும். அதாவது தசாபுத்தி பலன்கள் கூற பாவகத்தை தான் எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக இராசி கட்டத்தில் 7 இல் உள்ள கோள், பாவக கட்டத்தில் 6 ம் பாவகம் அல்லது 8 ம் பாவகதிற்க்கு  மாற வாய்ப்பு உள்ளது. இதனால் பலன்கள் மொத்தமாக மாறிவிடும். 
எனவே இராசியை வைத்து எதற்கு பலன் கூற வேண்டும், பாவகத்தை கொண்டு எதற்கு பலன் கூறவேண்டும் என்று நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். தற்காலத்தில் கணணி வந்து விட்டதால் பாவக கணிதம் போட எந்த சிரமும் இல்லை என்று ஆகிவிட்டது, இனியாவது தசாபுத்தி பலன்களை பாவகத்தை கொண்டு கூறுவோம்.
           நன்றி ! அன்புடன் K.S. சுந்தர ராஜன்.

4 comments:

  1. Very good explanation sir.

    saravanaraju

    ReplyDelete
  2. Thanks Sir.

    About points 4 and 8: I hope that we should only look into bhavaga chart for this. Then only we will know the actual placement of bhavaga adhipathi. Please clarify.

    ReplyDelete
  3. Bala Thank you for your Valuable Comments. பாவாதிபதி மாறி நின்ற பலன் மற்றும் பாவக காரகனின் நிலை போன்றவை இராசி கட்டத்தில் தான் பார்க்கவேண்டும். தசா புத்திக்கு மட்டும் தான் பாவக கட்டத்திற்கு போகவேண்டும். I am Sure.

    ReplyDelete
    Replies
    1. O Sirk, thanks for the clarification.

      Delete