Contact

Contact: K.S.SUNDARA RAJAN : (+91 ) 98949 20196

17 Feb 2014

வினாடி 15




அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,
  செவ்வாய் தோஷம் பகுதி – 3


செவ்வாய் தோஷம் லக்னத்தில் இருந்து மட்டும் தான் பார்க்க வேண்டும். சந்திரன் மற்றும் சுக்க்ரனில் இருந்து பார்க்க கூடாது என்று பார்த்தோம். இருப்பினும் செவ்வாய் தோஷதிருக்கு சில விதி விலக்குகளும் புத்தகங்களில் காண படுகிறது. அவை:
1.       செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம் பெற்று இருந்தால் தோஷமில்லை.
2.       செவ்வாயுடன் குரு சேர்ந்தாலும் அல்லது செவ்வாயை குரு பார்த்தாலும் தோஷமில்லை.
3.       இரண்டமிடத்து செவ்வாய், மிதுனம் மற்றும் கன்னி ராசியாக இருப்பின் தோஷமில்லை.
4.       பனிரெண்டம்மிடத்து செவ்வாய் ரிஷபம் துலாம் ராசியாக இருப்பின் தோஷமில்லை.
5.       சிம்மம் மற்றும் கும்ப ராசியில் செவ்வாய் இருப்பின் தோஷமில்லை.
6.       செவ்வாய் – சந்திரன்/புதன்/சூரியன்/சனி/ராகு/கேது  ஆகிய 6 கோள்களில் எதேனும் ஒரு கோளுடன் சேர்ந்தாலும் அல்லது இந்த 6 கோள்களில் எதேனும் ஒரு கோளால் பார்கப்பட்டலும் தோஷம் இல்லை.
7.       செவ்வாய் தன் மிதிரர்களான சூரியன், சந்திரன், குரு இவர்களின் வீட்டில் இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.
8.       கடகம் , சிம்மம் லக்னமாகி செவ்வாய் எங்கு இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.
இந்த 8 விதி விலக்கு இல்லாமல் இன்னும் பல விதி விளக்குகள் செவ்வாய் தோஷத்திற்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தையும் வைத்து பார்த்தால் செவ்வாய் தோஷமே எந்த ஜாதகத்திலும் வராது. அதனால்தான் ஒரே ஜாதகத்தை வைத்து கொண்டு ஒரு ஜோதிடர் செவ்வாய் தோஷம் இருக்கிறது என்று கூறுவார், அடுத்த ஜோதிடர் செவ்வாய் தோஷம் இல்லை என்று கூறுவார். புத்தகத்தை மட்டும் படித்து ஜோதிடர்கள் பலன் கூறினால் இப்படித்தான் குழப்பம் வரும்.
இந்த செவ்வாயை பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறேன். எனது ஆராய்ச்சியை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த ஆராய்ச்சிக்கு எனது வாடிக்கையாளர்கள் என்று கூட பார்க்காமல், கேட்கவே கூச்சப்படும் பல கேள்விகளையும் கேட்டு இருக்கிறேன். அவர்களிடம் இருந்து கிடைத்த பதில், அவர்களின் பல காம நடவடிக்கைகளை கொண்டதாக இருந்தது. அதனை எனது நேரடி வகுப்பில் மாணவர்களுடன் பகிர்ந்துள்ளேன். அதனை வெளிப்படையாக எழுத முடியாது. என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் கூறுகிறேன். செவ்வாயை மூன்று பிரிவுகளாக பிரிக்கவேண்டும்.
A) லக்னத்தில் இருந்து 7 மற்றும் 8  ல் இருந்தால் முழு செவ்வாய்.
B) லக்னத்தில் இருந்து 2, 4, 12  ல் பரிகார செவ்வாய்.
C) லக்னத்தில் இருந்து 1,3,5,6,9,10,11 செவ்வாய் இல்லை.
        எப்படி பொருத்த வேண்டும் ஒரே வரியில் கூற வேண்டும் என்றால், ஆண் பெண் இருவரில் ஒருவருக்கு A  இருந்து, மற்ற ஒருவருக்கு C இருந்தால் மட்டுமே பொருந்தாது. மற்றவை பொருத்தலாம் மணமக்களை பாதிக்காது.
                 நன்றி!
                       அன்புடன் K.S. சுந்தர ராஜன்.

2 comments: