Contact

Contact: K.S.SUNDARA RAJAN : (+91 ) 98949 20196

25 Feb 2014

வினாடி 18



வினாடி 18
பெண்ணின் சரியான திருமண காலம்

நமது வாழ்வியலின் தன்மைக்கு தகுந்தவாறு பெண்களுக்கு 15 வயது முதல்  35 வயது வரை திருமணம் செய்து வருகின்றோம். ஒரு பெண் வயதுக்கு வந்தவுடன் திருமணத்திற்கு தயாராகி விடுகிறாள். இருபின்னும் நமது அரசாங்கத்தின் சட்ட திட்டங்களின்படி பெண்களின் திருமண வயது 18 ஆகும். பெண்களுக்கு சரியான திருமண வயது என்ன என்பதில் குழப்பம் நிலவுகிறது என்பதினை அறிய முடிகிறது.
நாம் கம்ப்யூட்டர் உலகத்திற்குள் வந்த பின்பு, நீதிமன்றத்தில்  விவாகரத்து வழக்குகள் அதிகரித்து கொண்டே போகிறது. சில நீதிபதிகளே இந்த கேள்விகளுக்கு விடை தேடி பல்கலைகழகத்தில் ஜோதிடம் படித்து வருகிறார்கள். விவாகரத்துக்கு ஜோதிடம், ஜாதகம் மட்டுமே காரணம் அல்ல. ஏன் என்றால் தோஷம் எதுவும் இல்லாத, நல்ல தசா புத்தி நடக்கும் தம்பதியினரும் விவாகரத்துக்கு நீதிமன்றத்தை நாடுகின்றனர்.
என் அறிவுக்கு எட்டிய சில கருத்துக்களை பதிவு செய்கிறேன், தவறாக இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.
பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு மேசுரிட்டி (Maturity) அதிகம். அதேபோல் பருவ வயதில் உடல் வளர்ச்சியும் வேகமாக இருக்கும். உதாரணமாக ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் பெண்ணையும், அதே பத்தாம் வகுப்பு ஆணையும் பாருங்கள் பெண்ணின் செயலிலும் தோற்றத்திலும் மேசுரிட்டி இருக்கும். அனால் ஒரு ஆண், சின்ன பையனாக விளையாட்டு தனமாக இருப்பான். இன்று மாநில அளவில் பெண்களே 10 th ,12 th  ல் முதல் மதிப்பெண் வாங்கி வருவதற்கும் இதுவும் ஒரு காரணம். நமது தமிழ் கலாச்சாரப்படி மணமகனை விட மணமகள் வயது குறைந்தே இருக்கும், இதற்கும் பெண்களின் மசுரிட்டியே காரணம் ஆகும்.
சரி பெண்களின் திருமண வயதுக்கும், பெண்களின் மசுரிட்டிக்கும் என்ன தொடர்பு என்று பார்க்கலாம். ஒரு பெண், தனது பிறந்த வீட்டின் கலாச்சாரத்தை 15 வயது முதல் 18 வயதுக்குள் நல்ல புரிந்து கொள்கிறாள். பெண்களுக்கு இந்த வயது மிக முக்கியம் ஆகும். அறிவாற்றல் அபாரமாக இருக்கும், செயலின் வேகம், சுறுசுறுப்பு அதிகமாக காணப்படும். கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். இந்த வயதில் கருவுற்றால் 99 சதவீதம் சுக பிரசவம்தான் நடக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த வயதில்தான் கருப்பான பெண் கூட மிக அழகாக இருப்பாள். இதையெல்லாம் வைத்துத்தான் நம் முதியோர்கள் பெண்களுக்கு 20 வயதுக்குள் திருமணத்தை முடித்து விடுவார்கள்.
அனால் இன்று பெண்களுக்கு படித்து பட்டம் வாங்க வேண்டும், அதன் பின் வேலை பார்க்க வேண்டும், அதன் பின்தான் திருமணத்தை பற்றி யோசிக்க வேண்டும். பெண்கள் படிப்பது அல்லது வேலைக்கு போவது தவறு என்று சொல்ல வில்லை, அனால் இதெல்லாம் நடந்த பின் பெண்ணின் வயதை பாருங்கள் 25 க்கு மேல் ஆகிஇருக்கும். 25 வயது முதல் 30 வயது வரை பிறந்த வீட்டில் இருந்தால், பிறந்த வீட்டின் கலாச்சாரம் மட்டுமே ஒரு பெண்ணின் மண்டையில் நிற்கும். புதிய கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இருக்காது. அதனால்தான் புகுந்த வீட்டு பழக்கவழக்கங்களை ஒரு பெண்ணால் ஏற்றுகொள்ள முடிவதில்லை. பெண்களால் பிறந்த வீட்டு கலாச்சாரத்தை மாற்ற முடியவில்லை என்பதுதான் இன்றைய பிரச்சனையே. மாமியார், தனது வீட்டு பழக்கவழக்கங்களை மருமகளிடம் எவ்வளவு திணித்தாலும் மருமகளுக்கு வராது.
உதாரணத்துக்கு ஒரு செடியை இடம் மாற்றி நட்டால், புதிய மண்ணின் தன்மைக்கு தகுந்த மாதரி அது வேர் ஊன்டி வளர்ந்து கொள்ளும். அனால் மரத்தை இடம் மாற்றி நட்டால் மரம் பட்டுத்தான் போகும். அதேபோல் ஒரு குறிபிட்ட வயதுக்கு மேல், வளையும் தன்மையும் குறைந்து விடும். இதை மனதில் வைத்து உங்கள் வீட்டு பெண்களுக்கு நமது அரசாங்க சட்டம் சொல்லும் 18 வயதுக்கு மேல், அதிக பட்சம் 23 வயதுக்குள் திருமணம் செய்து வையுங்கள். இறைவனால் மனிதனுக்கு அழிக்கப்பட்ட வரப்ரசாதம் தாம்பத்திய சுகம். இந்த சுகத்தையும் அனுபவிக்க விடாமல் காலம் தள்ளாதீர்கள். 20 வயது முதல் 40 வயது வரை தாம்பத்திய சுகம் அனுபவிப்பதற்கும்,  35 வயது முதல் 40 வயது வரை தாம்பத்திய சுகம் அனுபவிப்பதற்கும்  உள்ள வித்தியாசத்தை உணர்ந்துகொள்ளுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே, வாழ்கையை வீணாக்காதீர்கள். நமது முனோர்கள் கூறிய பாதையில் இருந்து விலகி வர வர நமது கலாச்சாரமும் சீர் கெட்டுபோகும் என்பதில் ஐயமில்லை.
இந்த கருத்தை ஆமோதிப்பவர்களும், மறுப்பவர்களும் தயவு செய்து Comments  செய்யவும்.
             நன்றி ! அன்புடன் K.S. சுந்தர ராஜன் .
   

5 comments:

  1. ப.சரவணன் பரமத்தி_வேலுர்25 Feb 2014, 23:31:00

    உண்மை! மிகவும் ஒரு முக்கியமான வரவேற்கதக்க செய்தி!இன்றைய நவீன யுகத்தில் கிட்டதட்ட 60சதவீதம் பேர்25வயது அல்லதுஅதற்கு மேல் தான் திருமணம் செய்துகொள்கிறார்கள்் நன்றி ஐயா!.

    ReplyDelete
  2. உண்மை ஐயா ,உங்கள் கருத்தை முற்றிலும் ஆமோதிக்கிறேன் ,மேலும் தொடர்ந்து எழுதவும் -நன்றி

    ReplyDelete
  3. ungal karuthai amothikireyn .

    saravanaraju

    ReplyDelete
  4. தங்கள் கருத்துகளை பதிவு செய்த சரவணன்,சரவண ராஜு , அஸ்ட்ரோ குருக்கள் ஆகியோருக்கு எனது நன்றி ! வரலாற்றில் பதிவுகள் மிக முக்கியம் .

    ReplyDelete
  5. Excellent article sir. Your opinion is both scientifically and culturally true. Request you to provide more such valuable articles.

    ReplyDelete