Contact

Contact: K.S.SUNDARA RAJAN : (+91 ) 98949 20196

12 Feb 2014

வினாடி 12



அனைவருக்கும் காலை வணக்கம் !
நான்காம் பாவகம் எந்த வகையில் சுகஸ்தானம் ஆகும்?

இயற்கையான வாழ்வவை  1,5,9 ஆகிய பாவகங்கள் குறிக்கும். இதற்கு நேர் எதிராக 4,8,12 ம் பாவகங்கள் செயற்கையை குறிக்கும். அனைவரும்     8, 12 ம் பாவங்கள் செயற்கையான பாவங்கள் என ஒத்துக்கொள்வீர்கள், அனால் நான்காம் பாவம் எப்படி செயற்கை என்பதில் சிலருக்கு சந்தேகம் வரலாம், காரணம் நான்காம் பாவத்தில் உள்ள பல காரகங்களில் சுகம் என்ற பலனும் கூறப்பட்டு உள்ளதே என்று நீங்கள் நினைக்கலாம். சுகம் தான், அனால் இந்த சுகம் நம்மை நோயாளியாக மாற்றும். எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
பஞ்ச பூதத்தின் தத்துவப்படி தான் நமது உடல் இயங்குகிறது. நமது உடலுக்கு நெருப்பு தத்துவம் நமது உடல் உழைப்பின் மூலம்தான் கிடைகிறது. நமது உடலை நல்ல வளைத்து வேலை செய்து வந்தால் நம் உடலுக்கு தேவையான நெருப்பு சத்து கிடைக்கும். 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை நமது மனித சமுதாயதின் உடல் உழைப்புக்கு பஞ்சம் இல்லை அனால், சமீப காலமாக உடலை வருத்தாமல் எப்படி வேலை செய்வது என அறிவியல் துறை எல்லா கண்டுபிடிப்புகளும் செய்துவிட்டனர்.
உதாரணமாக காலையில் எழுந்து வாசல் கூட்டுவது, தண்ணீர் தெளிப்பது, கோலம் போடுவது, வீடு கூட்டுவது, வீடு கழுவிவிடுவது, துணி துவைப்பது, இட்லி மாவு ஆட்டுவது, மாவு இடிப்பது, சட்டினி அரைப்பது என்று குடும்ப தலைவிக்கு குறைந்த பட்சம் பத்து மணிநேரம் உடல் உழைப்பு இருக்கும், அதனால் உடலுக்கு தேவையான பஞ்ச பூத தத்துவமும் சம அளவில் கிடைத்து வந்தது. அதனால் அன்று எடை அதிகமும் இல்லை நோயும் இல்லை. இன்று அறிவியல் நமது உடலுக்கு வேலையை குறைத்து சுகத்தை தருவதாக நினைத்துக்கொண்டு Grinder, Mixie, Washing Machine, Cleaning Machine போன்றவற்றை பயன்படுத்தி வருகிறோம். இந்த சுகம் இயற்கையானதா? அல்லது செயற்கையானதா? என தாங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள். அதனால் தான் TALI முறைப்படி நான்காம் பாவகம் லக்னத்திற்கு 70 சதவீதம் கெடுதல் என எடுத்துக்கொள்கிறோம்.                                          
                         நன்றி !    அன்புடன் K.S. சுந்தர ராஜன்.

No comments:

Post a Comment