Contact

Contact: K.S.SUNDARA RAJAN : (+91 ) 98949 20196

11 Feb 2014

வினாடி 11



அனைவருக்கும் இனிய காலை வணக்கம் .
பிதுர் தோஷம் நம்மை பாதிக்குமா ?



நம்பிக்கை உடையவர்களுக்கு மட்டும் தான் ஜோதிடம். அதேபோல் இந்து மதத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும்தான் பிதுர்தோஷம் கூறப்படுகிறது, பிறமதத்தவரை  கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதில் உடன்பாடு இல்லாதவர்கள் தயவுசெய்து இதை படிக்க வேண்டாம்.
பொதுவாக பிதுர் தோஷம் பல விதமாக கூறப்படுகிறது. அதில் அதிகமாக பாதிக்க படுவதை நாம் பாப்போம். நமக்கோ அல்லது நமது வரிசுகளுக்கோ 25 வயதுக்குள், உபஜெய ஸ்தானமான 3,6,10,11 யை தவிர மற்ற பாவகதில் ராகு நின்று திசையை நடத்துமேயானால் பிதுர் தோஷம் உண்டு என்று எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக நமது வாழ்கையின் தரம் நமது 25 ஆவது வயதிற்குள் தீர்மானம் செய்யப்பட்டுவிடுகிறது. இந்த கால கட்டத்திற்குள் பாதிப்பை தர கூடிய ராகு திசை வருமேயானால் எதிர்காலம் பாழ்பட்டுவிடும். இவ்வாறு ராகு திசை நடக்க கூடிய ஜாதகம் தங்களிடம் வந்தால் முன்னோர்களுக்கு சிரார்த்த திதி தொடர்ந்து கொடுத்து வருகிறார்களா என கேட்கவும், இல்லை என்று கண்டிப்பாக பதில் வரும். தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து சிரார்த்தம் கொடுத்து வரக்கூடியவர்கள் குடும்பத்தில் இருந்து வரும் ஜாதகங்களில் இந்த  பிதுர்தோஷம் ஏற்படுவதில்லை . அதாவது பாதிப்பு இருக்காது.
நாம் கடவுளை பார்க்க முடியுமோ முடியாதோ அதை பற்றி கவலை இல்லை. அனால் நமது மூதாதையர்களே  நமது கண்கண்ட தெய்வங்கள் ஆகும். நாம் நல்லா வரவேண்டும் என்பதில் நம் தாய் தந்தையரை விட யாருக்கு அக்கறை இருக்க முடியும்? அதேபோலதான் நமது மூதாதையர்களும் ஆகும். நமது தலைமுறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த ஆண்மகன்தான் இக்கடமையை நிறைவேத்தவேண்டும், மூத்த ஆண்மகனால் செய்ய முடியாத சூழ்நிலையில் அடுத்தவர் செய்யலாம் தவறு இல்லை. தகப்பனார் இறந்த திதி தெரியாதவர்கள், தை அல்லது  ஆடி அமாவாசை அன்று செய்ய வேண்டும். எனவே வருடா வருடம் நமது மூதாதையர்களுக்கு சிரார்த்த திதி ஒழுங்காக செய்து வருவோம் நமது வாரிசுகளை இன்னல்களில் இருந்து காப்போம் !                   
                 நன்றி ! அன்புடன் - K.S.சுந்தர ராஜன்

1 comment: