Contact

Contact: K.S.SUNDARA RAJAN : (+91 ) 98949 20196

31 Mar 2014

வினாடி - 31



அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,
பஞ்ச மஹா புருஷ யோகம் என்பது குஜாதி ஐவர்களான செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி ஆகியோர் லக்ன கேந்திரத்தில் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று இருந்தால் இவ்யோகம் ஏற்படுகிறது. அதே வேலையில் இயற்கை narkolgalnarkolgal நற்கோள்களான புதன், குரு, சுக்ரன் கேந்திரத்திருக்கு அதிபதி அனால் கேந்திர ஆதிபத்திய தோஷம் ஏற்படும். இந்த நிலையை தோஷம் என எடுத்துக் கொள்ளவா அல்லது யோகம் என எடுத்துக்கோள்ளவா?
இந்த பஞ்ச மகா புருஷ யோகம் ஏற்படும் பொழுது கேந்திர ஆதிபத்திய தோஷம் அடிபட்டு போகிறது என்ற விதிவிலக்கும் புத்தங்களில் உள்ளது. அனால் நடைமுறையில் இந்த பஞ்ச மகா புருஷ யோகம் உடைய ஜாதகர் எதோ ஒரு வகையில் பாதிக்க படுகிறார் என்பதை மறுக்க முடியாது. இதில் யோகமும் வேலைசெய்யும் உண்டு தோஷமும் வேலைசெய்யும். இரண்டும் உண்டு.
இந்த சிக்கலை நமது TALI முறை படி அலசி பார்போம். கேந்திரம் என்பது 1, 4, 7, 10 ஆகிய ஸ்தானங்களை குறிக்கும். இதில் 1, 7 ம் பாவங்கள் ஒற்றைப்படை ஆகும், 4, 10 ம் பாவங்கள் இரட்டைப்படை ஆகும்.
1, 7 ம் பாவங்களில் ஒரு கோள் இருப்பின் அகம் சார்புடைய காரகங்கள் வலுபெறும், அதேவேளையில் புறம் சார்புடைய காரகங்கள் வலுவிழக்கும் என்பது பொதுவிதி ஆகும்.
4, 10 ம் பாவங்களில் ஒரு கோள் இருப்பின் புறம் சார்புடைய காரகங்கள் வலுபெறும், அதே வேளையில் அகம் சார்புடைய காரகங்கள் வலுவிழக்கும் என்பது பொது விதி ஆகும்.
எனவே பஞ்ச மகா புருஷ யோகம் அகம் சார்புடைய காரகங்கள் அல்லது புறம் சார்புடைய காரகங்கள் எதோ ஒன்றை மட்டும் கொடுக்கும் ஒன்றை கெடுக்கும். இதனால்தான் Tali முறையில் பாரம்பரிய முறையில் உள்ள யோகம், தோஷம், ஆட்சி, உச்சம், நீச்ச பங்கம், அஸ்தமனம், வக்ரம் போன்றவற்றை எடுத்துக்கொள்வதில்லை. 
நன்றி ! அன்புடன் K.S. சுந்தர ராஜன்.

28 Mar 2014

வினாடி - 30



ஜோதிடம் என்பது கலையா அல்லது அறிவியலா?

ஜோதிடம் என்பது கலையா அல்லது அறிவியலா என்ற கேள்விக்கு ஒரே பதில் வந்து இருந்தால், ஜோதிடம் அறிவியல் ஆகி இருக்கும். ஜோதிடம் அறிவியல் என்று ஆகி விட்டால், இன்றைய அறிவியல் உலகத்தில் ஒரு குழந்தை பிறந்த அன்றே அக்குழந்தைக்கு ஆயுள் முடியும் வரை நடக்க இருக்கும் பலன்களை கணணி கொடுத்துவிடும். பிறகு ஜோதிடர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும்.
ஜோதிடம் கண்டிப்பாக அறிவியல் இல்லை. வான சாஸ்திரம் அறிவியல், வான சாஸ்திரதின் கோள்நிலையை ஜோதிடம் கையில் எடுத்துக் கொண்டதினால் ஜோதிடம் அறிவியல் ஆகிவிடாது. ஒரே நொடியில், ஒரே மருத்துவமனையில், இரு வேறுபட்ட தாய்மார்களுக்கு, இரு வேறுபட்ட அந்தஸ்துகளுடன், குழந்தைகள் பிறக்கின்றன. நாம் இதனை நேரடி ஒளிபரப்பு வசதியுடன் பார்க்கவும் முடியும். ஒரு குழந்தையின் தகப்பனார் கோடீஸ்வரன் மற்றொரு குழந்தையின் தகப்பனார் கூலி. உலகம் முழுவதும் பின்பற்றப்படும் எந்த முறைகளில் கணித்தாலும் இரு குழந்தைகளுக்கும் ஒரே ஜாதகம்தான் வரும். அனால் பலன்கள் கண்டிப்பாக மாறுபடும்.
ஒரே ஆசிரியரிடம் படித்த 10 மாணவர்களிடம் ஒரு குழந்தை பிறந்த நேரத்தை கொடுத்து பலன் பார்க்க சொன்னால், Time Rectification என்ற பெயரில் 10 மாணவர்களும், 10 விதமான நேரங்களில், 10 விதமான பலன்கள் கூறுவார்கள். சஷ்டியாம்சதில் மாறிவிடும், Sub Lord, Sub-Sub Lord, Sub-Sub-Sub Lord மாறிவிடும் என கணிதத்தில் வேண்டுமானால் வேறுபாடு காண்பிக்கலாம், அனால் ஜாதகம் பார்க்க வருகின்றவன் தோற்றத்தை பார்க்காமல் நம்மால் பலன் கூற முடியாது. இதைத்தான் நம் முன்னோர்கள் கால, தேச, வர்த்த மானம், ஜாதி, மத, நிற பேதம், சுருதி, யுக்தி, அனுபவத்துடன் ஜோதிடம் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்கள். இதில் அனுபவம் வாய்ந்த ஜோதிடர்கள் தவறான ஜாதகத்தை கொடுத்தாலும் சரியான பலன் கூறிவிடுவார்கள்.
இராசி கட்டத்தை வைத்தே ஒழுங்காக பலன் கூற முடியவில்லை அவ்வளவு குழப்பம் இருக்கிறது, இதில் சஷ்டியாம்சத்தை வைத்து என்ன பலன் உருப்படியாக கூறமுடியும்? நல்ல பலன் என்றால் குரு பார்க்கிறது என்றும் கேட்ட பலன் என்றால் சனி பார்க்கிறது என்றும் சமாளித்து வருகிறோம் என்பதே நிதர்சனமான உண்மை. பல சந்தர்பங்களில் ஜோதிடம் பார்கிறவர்களுக்கே ஜோதிடம் உண்மைதானா என சந்தேகம் வரும். ஒரு சில இடங்களில் ஜோதிடம் உண்மையாக இருக்கிறது, அனால் பல இடங்களில் ஜோதிடம் நம் காலை வாரி விடுகிறது. நாம் முழுமையாக கற்றுக் கொள்ளவில்லை, ஜோதிடம் கடல் போன்றது என்று நாம் நம்மை தேற்றி கொள்ளவேண்டியது தான். எல்லா ஜோதிட நூல்களையும் படித்தால் பைத்தியம் பிடித்து விடும், அவ்வளவு முரண்பாடுகள் உள்ளது. சரி எல்லா ஜோதிட நூல்களையும் படித்து அதன் பின்னர் பலன் கூறலாம் என்றால் எத்தனை ஆண்டுகள் படிப்பது, அதற்குள் ஆயுள் முடிந்துவிடும். ஜோதிடம் பார்ப்பது எவ்வளவு சிரமம் என்று ஒரு ஜோதிடனுக்கு தான் தெரியும்.
இந்த நிலையில் பெருமைக்காக பல பட்டங்களையும் நம் பெயருக்கு முன்னும் பின்னும் போட்டுக் கொள்கிறோம். என்னை கேட்டால் ஜோதிடர் என்று சொல்லி கொள்ளவே தகுதி இல்லை. ஜோதிடத்தை உண்மையாகவே மனசாட்சியின் படி ஒருவர் முனைவர் பட்ட படிப்பில் ஆய்வு செய்தால், கண்டிப்பாக ஜோதிடம் பொய் என்றுதான் வரும். ஏன் என்றால் ஒரே ஒரு விதியை கூட அனைவருக்கும் பொருந்தும் வண்ணம் அடித்து கூற முடியாது.
“இருட்டு அறையில், இல்லாத கருப்பு பூனையை தேடுவது போல் உள்ளது ஜோதிடம்  ஜோதிடம் சொல்ல சரியான கருவிகள் நமது கைகளில் இல்லையே என்ற ஆதங்கத்துடன் - K.S. சுந்தர ராஜன்.

27 Mar 2014

வினாடி - 29



அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,
ஒரே வரியில் பலன் தேவை,
விவாகரத்து ஆகும் அல்லது மீண்டும் சேருவார்கள்.

பெண் ஜாதகத்தில் நடப்பு சனி திசையில் சந்திர புத்தி 21.06.2015 வரை. 
பெண் விவாகரத்து கேட்கிறார், பெண்ணின் மன மாற்றத்திற்கு எதாவது வழி இருக்கிறதா? அல்லது விவாகரத்து கொடுத்து விடலாமா என மணமகன் வீட்டார் கேட்கின்றனர். இரு ஜாதகங்களையும் ஆய்வு செய்து பலன் கூறுங்கள். இவர்களின் திருமண நாள் : 28.05.2009 .  2011 ம் ஆண்டு பிரசவத்திற்கு சென்ற பெண் மீண்டும் கணவன் வீட்டுக்கு வராமல், வரதட்சணை கொடுமை என போலீசில் புகார், பின்னர் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு...
ஆண் ஜாதகத்தில் நடப்பு புதன் திசையில் ராகு புத்தி 13.10.2014 வரை.
எனது முடிவு விவாகரத்து கொடுத்து விடலாம்.
அன்புடன் K.S. சுந்தர ராஜன்.

21 Mar 2014

WISH YOU HAPPY ASTROLOGERS DAY



அனைத்து ஜோதிட அறிஞர்களே,
இன்று நம் கையில் தவழும் ஜோதிடக்கலை சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் படிப்படியாக கண்டுப்பிடித்த ஒரு அறிய பொக்கிஷம் ஆகும். இன்றும் அறிவியலுக்கு எட்டாத பல ரசியங்களை நமது முன்னோர்கள் தவம் இருந்து கண்டுப்பிடித்த கலை ஆகும். நாம் புத்தகம் மூலமாகவோ அல்லது நேரடி குரு மூலமாகவோ இந்த ஜோதிட கலையை ஓர் அளவு தெரிந்து கொண்டுள்ளோம். சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளாக ஆய்வு செய்து கண்டுபிடித்த ஜோதிட அறிஞர்களுக்கும், பல முறைகளில் பதிவு செய்து வந்த ஜோதிட ஆர்வலர்களுக்கும், நமக்கு ஜோதிடம் கத்துக் கொடுத்த குருவுக்கும் நன்றி சொல்லும் நாள் என இந்த தேதியை (March – 21 ) தேர்வுசெய்வோம். வட நாட்டினர், மற்றும் மேற்கத்திய நாட்டு ஜோதிடர்களும் இந்த நாளின் முக்கியத்தும் நன்கு தெரியும்.
இன்று இந்த கருத்தை அனைவரும் பகிர்ந்து கொள்வோம், அடுத்த ஆண்டு இந்த நாள் உலக ஜோதிடர்கள் தினமாக மாறிவிடும்.
                             Please Share it !


EASTER SUNDAY CALCULATIONS




Good Friday, Holy Saturday & Easter Sunday Calculations

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,

இன்று March – 21  சூரியன் பூமத்திய ரேகையை ( Celestial Equator ) கடக்கும் நாள் ஆகும் (இன்று கடந்த காட்சி மேலே படமாக உள்ளது). மேற்கத்திய ஜோதிடப்படி இன்று அவர்களுக்குக்கு வருடப்பிறப்பு ஆகும். (According to Sayana Calculation ). நமது பஞ்சங்கப்படி இன்று மேஷாயணம், அதாவது சக ஆண்டின் தொடக்கம் (1936) சைத்ரம் மாத ஆரம்பம் ஆகும். கிருத்துவர்களின் முக்கியமான ஈஸ்டர் சண்டே இன்றில் இருந்துதான் எண்ணப்படுகிறது.
இன்றைய தேதியில் இருந்தது வரும் முதல் பௌர்ணமி திதியை எடுத்துக்கொள்ளுங்கள், அது ஏப்ரல் 14 ம் தேதி வரும். பௌர்ணமி திதியை தொடர்ந்து வரும் ஞாயிறு (April-20) அன்று கிறித்துவர்களின் முக்கியமான பண்டிகை ஈஸ்டர் சண்டே (Easter Sunday) ஆகும். ஞாயிறுக்கு முதல்நாள் ஹோலி சாட்டர்டே (Holy Saturday). அதற்கும் முதல்நாள் வெள்ளிக்கிழமை அன்று (Good Friday) ஆகும்.

இதே கணிதப்படி அடுத்த ஆறு ஆண்டுகளின் ஈஸ்டர் சண்டே வரும் நாட்கள். 
20.04.2014, 
05.04.2015,
27.03.2016,
16.04.2017,
01.04.2018,
21.04.2019,
12.04.2020.
நன்றி !
       அன்புடன் K.S. சுந்தர ராஜன்.