Contact

Contact: K.S.SUNDARA RAJAN : (+91 ) 98949 20196

14 Mar 2014

வினாடி - 25



வினாடி – 25
ஆறாம் பாவகம் மிகவும் தீய பாவகமா ?
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,
நமது முன்னோர்கள் 6, 8, 12 ம் பாவங்களை தீய பாவங்கள் என குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஒரு பாவத்தில் இருந்து அதனுடைய 8 மற்றும்  12 ம் பாவங்கள் அந்த பாவத்தை கெடுக்கும் என்பது ஒரு பொது விதியாகும். அதன்படி 8 மற்றும் 12 ம் பாவங்கள் என்பது லக்னத்தை கெடுக்கும் பாவங்கள் பாவங்கள் ஆகும். அனால் 6 ம் பாவம் என்பது லக்னத்திற்கும் 8 மற்றும் 12 ம் பாவமாக வரவில்லை, அதேநேரத்தில் லக்னத்தின் திரிகோண பாவமான      5 மற்றும் 9 ம் பாவகங்களுக்கும்  8 மற்றும்  12 ம் பவகமாக அமையவில்லை என்பதை கவனிக்கவும். எனவே 6 ம் பாவகம் என்பது லக்னத்திற்கு ஒரு வரைமுறைக்கு உட்பட்ட பலனை தருமே தவிர லக்னத்தை கெடுக்கும் பாவகம் ஆகாது.
ஆறாம் பாவகம் செயல்படும் பொது ஜாதகருக்கு நோய் வருமே என நீங்கள் கேட்கலாம், மருத்துவர்களால் கண்டுபிக்க கூடிய நோய் தான் வரும், அதேபோல் மருந்துக்கு கட்டுப்பட கூடிய நோய்தான் வரும். ஆறாம் பாவகம் செயல்படும் பொழுது போட்டி போடும் மனப்பான்மை வந்துவிடும். மற்றவர்களை வீழ்த்தி வெற்றி பெறுவது, போட்டி தேர்வுகளில் வெற்றி காண்பது போன்ற நல்ல பலன்களும் ஏற்படும். அதேபோல் பல சொத்துக்கள் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும், அதற்காக துணிச்சலாக கடன் வாங்குவார்கள் கவலை படமாட்டார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் அதன் மூலம் பெறப்படும் வாடகை பணம்.
மாத சம்பளம் வாங்கும் வேலையில் இருப்பவர்களுக்கு 6 ம் பாவகம் செயல்படுவது நன்மை என்றே கூறலாம். காரணம் மேல் அதிகாரியிடம் கீழ்படிந்து நடப்பார்கள், அதேபோல் தனக்கு கீழ் உள்ளவர்களை கீழ்ப்படியவும் வைப்பார்கள், அக வேலை ஒழுங்காக நடைபெறும். நேரம் பார்க்காமல் கடமையை ஒழுங்காக செய்வார்கள்.
வாழ்க்கை துணை, தொழில் கூட்டாளி, பிற மனிதர்கள் ஆகியோரிடம் ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை கண்டிப்பாக வந்து விடும். இந்த       ஆதிக்கம் செலுத்தும் மனபான்மையால்தான் திருமண வாழ்வில் பிரச்சனை வருகிறது. ஆறாம் பாவகம் செயல்படும் பொது எந்த விஷயங்களையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள், தனனுக்குளேயே  வைத்துக்கொள்வார்கள். அதனாலேயே டென்ஷன், டிப்ரேசென் (Tension, Depression ) போன்ற மன நோயும் ஏற்படும். மேலும் உடலில் நோய் எதுர்ப்பு சக்தி குறையும், எதிலும் திருப்தி என்பது சுத்தமாக இருக்காது. யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என பிரித்து பார்க்கும் திறன் இருக்காது, எல்லோரையும் சந்தேகப்படுவார்கள்.
எனவே ஆறாம் பாவகத்தில் நன்மையையும், தீமையும் கலந்தே உள்ளது, எனவேதான் நமது முன்னோர்கள் ஆறாம் பாவகத்தை உபஜெய ஸ்தானம் என்று கூறி வைத்துள்ளனர். எனவே ஆறாம் பாவகம் மிகவும் தீய பாவகமாக கருத வேண்டாம், ஒரு சில நல்ல பலன்களும் இருக்கத்தான் செய்கிறது.
         நன்றி ! அன்புடன் K.S. சுந்தர ராஜன்

No comments:

Post a Comment