Contact

Contact: K.S.SUNDARA RAJAN : (+91 ) 98949 20196

17 Mar 2014

வினாடி - 28



வினாடி – 28
ஏழரை சனியில் குரு பார்வை பலன் தருமா ? ! ? !
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,

     இந்த ஜாதகருக்கு 1992 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரை குரு திசை நடந்துள்ளது. 2008 ம் ஆண்டுடன் இந்த ஜாதருக்கு 30 வயது முடிந்து விடுகிறது. குரு நின்ற பாவகம் 1 ஆகும். தசையை நடத்தும் கோள் ஒன்றாம் பாவகதில் இருப்பது திருமணத்திற்கு மிகவும் சாதகமான அமைப்பு ஆகும், இருந்தும் ஏன் திருமணம் தாமதமானது?
     திருமணத்தை ஜாதகம் மற்றும் தசா புத்தி மட்டும் நடத்திவிடாது. அவரவர் வாழும் சூழ்நிலையும் நாம் பார்க்க வேண்டும். பொதுவாக ஒரு செயல் நடைபெற வேண்டுமெனில், அந்த செயலுக்காக ஜாதகர் செய்யும் முயற்சியும் நாம் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும். முயற்சி செய்பவனுக்கு மட்டுமே நாம் கூறும் பலன் சரி வரும். அதன்படி 2008 ம் ஆண்டு வரை திருமணதிற்கு முயற்சி செய்தீர்களா? என கேட்டேன். அதற்கு அவர்கள் இல்லை, ஜாதகரின் 2 சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைக்கவே 2010 ம் ஆண்டு ஆகிவிட்டது, அதன் பின் தான் இந்த ஜாதகருக்கு பெண் பார்த்து வருகிறோம் என கூறினார்கள். ஒன்றாம் பாவகதில் இருந்து கோள் திசையை நடத்தினாலும் திருமணம் நடைபெறாமல் போனதற்கு இதுவே காரணம். நாம் கூறிய பலன் நடைபெறவில்லை எனில் அதற்கான காரணத்தை கண்டுபிடியுங்கள், அதை விடுத்து ஜோதிடத்தில் தவறு உள்ளது, நாம் பார்க்கும் முறையில் தவறு உள்ளது என விதிகளை விட்டுவிட்டு, விதி விலக்குகளை உருவாக்கி கொண்டே போகாதிர்கள்.
     2010 ம் ஆண்டுக்கு பின் இந்த துலா இராசி காரருக்கு 2011/12 & 2013/14 ஆகிய ஆண்டுகளில் குரு பார்வை உண்டு கண்டிப்பாக திருமணம் நடந்து விடும் என பல ஜோதிட நண்பர்கள் கூறி, இவர்களும் பல முயற்சிகள் செய்தும் பலன் இல்லை. வரும் வைகாசி 30 க்குள் திருமணத்தை முடிக்க வேண்டுமாம் இல்லை என்றால் திருமணம் நடக்காது என ஒரு சில ஜோதிடர்கள் கூறுகிறார், வேறு சிலர் ஏழரை சனி இன்னும் 3 ஆண்டுகள் இருக்கிறது அதுவரை திருமணம் நடக்காது என கூறுகிறார்களே என பயந்து போய் என்னிடம் வந்தார். ஏழரை சனியில் குரு பார்வை பலன் தருமா அல்லது தராதா என பட்டிமன்றம் தான் வைக்க வேண்டும். அன்பு ஜோதிட நண்பர்களே வெறும் கோட்சாரத்தை மட்டும் வைத்து பலன் கூறாதீர்கள், கொஞ்சமாவது தசா புத்தியை பாருங்கள். இந்த ஜாதருக்கு
சனி திசையில் சுய புத்தி 21.04.2008 முதல்  25.04.2011 வரை.
சனி திசையில் புதன் புத்தி  25.04.2011 முதல் 02.01.2014 வரை.
சனி திசையில் கேது புத்தி 02.01.2014 முதல் 11.02.2015 வரை.
     சனி தசா, சனி நின்ற பாவகம் 2, இது அளவுக்கு அதிகமான கையிருப்பு பணத்தை தருமே ஒழிய திருமணதிற்கு சாதகமான அமைப்பு இல்லை, காரணம் 7 ம் பாவகத்திற்கு 2 ம் பாவகம் என்பது 8 ம் பாவகமாக வரும். இரண்டாம் பாவகம் 7 ம் பாவகத்தை எவ்வாறு கெடுக்கும் என தனியாக ஒரு கட்டுரை விரைவில் எழுதுகிறேன். அடுத்து வந்த புதன் புத்தியும் 2 ம் பாவகத்தையே செயல் படுத்தியது. இவ்விரு புத்திகளில் ஜாதகர் ஒரு Multi National Company  ல் - Area Manager  ஆக பதவி உயர்வு பெற்று, அருமையான வருமானத்தில் இருந்து வருகிறார். நடப்பு, 02.01.2014  முதல் கேது புத்தி ஆகும். ஒரு மாதத்திற்கு முன்பு தொழில் இடமாற்றம் ஆகி இருக்கிறது என்பது கூடுதல் தகவல். இந்த கேது புத்தி கண்டிப்பாக DASA BREAK  யை ஏற்படுத்தும், மேலும் கேது திருமணதிற்கு சாதகமான 9 ம் பாவகத்தில் இருப்பதால் கேது புத்தி முடியும் முன், அதாவது  வரும்  11.02.2015 க்குள் கண்டிப்பாக திருமணம் முடிந்து விடும் என தைரியம் சொல்லி அனுப்பி வைத்தேன்.
     நன்றி !
             அன்புடன் K.S. சுந்தர ராஜன்

1 comment:

  1. ஏழரை சனி_குரு பலம் எனக் காரணம் கூறிக்கொன்டிருக்கும் நண்பகளும்ஜோதிடர்களும் புரிந்துகொண்டு தசா-புத்தியையும் கவனிக்க நினைவு கூறியதற்கு நன்றி!ஐயா!...

    ReplyDelete