Contact

Contact: K.S.SUNDARA RAJAN : (+91 ) 98949 20196

8 Mar 2014

வினாடி - 23



கேள்வி : வீடு கட்டலாமா ?

அனைவருக்கும் இனிய காலை வணக்கம், 
இன்று TALI METHOD ன் படி ஒரு ஜாதகத்திற்கு பலன் பார்போம். மேற்கண்ட ஜாதகத்தை 21.08.2013 அன்று என்னிடம் கொடுத்து வீடு கட்டலாமா என்று கேள்வி கேட்டனர். TALI METHOD ன் படி ஒரு ஜாதகத்திற்கு பலன் கூறுவதற்கு தசா புத்தியை மட்டும் பார்த்தால் போதுமானது. தசாவை விட புத்தி வலிமையானது, அதேபோல் அந்தரத்தை விடவும் புத்தி வலிமையானது என்பது நமது பொது விதியாகும்.
ஜாதகருக்கு நடப்பு சனி தசா சுக்ர புத்தி 30.08.2010  முதல் 30.10.2013 வரை. சுக்ரன் நின்ற பாவகம் ஒன்று ஆகும், ஒன்றாம் பாவகதில் ஒரு கோள் நின்று புத்தியை நடத்தும் போது வீடு கட்டும் முயற்சி அவ்வளவாக இருக்காது. அவர்களும் இப்பொது வீடு கட்டும் எண்ணம் இல்லை, அனால்  இன்னும் 3 அல்லது 4 மாதங்களுக்கு பிறகு கட்டலாம் என நினைக்கிறோம் என கூறினார்கள். இந்த ஜாதகர் கூறும்  3 அல்லது 4 மாதங்களுக்கு பிறகு என்ன தசா புத்தி நடக்கும் என பார்த்தால் சனி திசையில் சூரிய புத்தி 30.10.2013 முதல் 12.10.2014 வரை நடக்கும். சூரியன் நின்ற பாவகம் 3, வீடு கட்ட வேண்டும் என்றால் TALI METHOD ன் படி 4, 8, 12 அல்லது  2,6,10 ம்  பாவகம் வேலை செய்ய வேண்டும். அனால் இந்த ஜாதகருக்கு மூன்றாம் பாவகம் வேலை செய்யும் பொது வீடு கட்டலாமா என கேட்கின்டனர். கூடுதல் தகவல் ஜாதகர் தனியார் கல்வி நிறுவனத்தில் ஆசிரியராக வேலை பார்க்கிறார். TALI METHOD ன் படி ஆசிரியர் தொழில் என்பது நான்காம் பாவக காரக தொழில் ஆகும்.
இதன் படி சனி தசா சூரிய புத்தியில் வீடு கட்ட முடியாது, அதற்கு மேலும் முயற்சி செய்து வீடு கட்டினால், ஆசிரியர் வேலை போய்விடும் அபாயம் உள்ளது என பலன் கூறிப்பட்டது. அவர்களும் பலனை  கேட்டு விட்டு சென்று விட்டனர். இப்பொழுது என்ன நடந்ததுள்ளது  என்றால், கடந்த இரண்டு மாதங்களாக வீடு கட்டுவதற்கு  அஸ்திவாரம் போட்டிருகிறார்கள், அதே சமயம் ஆசிரியர் வேலை திடீரென போகும் நிலை ஏற்பட்டு விட்டது. உடனே மீண்டும் என்னிடம் ஓடி வந்துவிட்டனர்.
வீடு கட்டுவதை 12.10.2014 வரை (அதாவது சூரிய புத்தி முடியும் வரை) நிறுத்தி வையுங்கள், வேலைக்கு வந்த பிரச்சனை சரியாகிவிடும். அடுத்து சந்திர புத்தி வருகிறது, சந்திரன் நின்ற வீடு 10 ஆகும், அந்த புத்தி வீடு கட்டவும் சாதகமாக இருக்கும்,  அதே நேரம் வேளையில் பதவி உயர்வு, கூடுதல் பொறுப்புகளும் கிடைக்கும் என கூறி அனுப்பி உள்ளேன் .
இந்த கட்டுரை மூலம் ஒரு செய்தியை தெளிவுபடுத்திக் கொள்ளவும். ஒரு குறிப்பிட்ட பாவகத்திக்கு 12 ம் பாவக்கத்தில் நின்று ஒரு கோள் புத்தியை நடத்தினால், அந்த குறிப்பிட்ட பாவக வேலை எதையும் செய்ய கூடாது, அதையும் மீறி செயல் படுத்தினால் அந்த குறிப்பிட்ட பாவக காரகத்தில் வேறு எதாவது காரகம் உறுதியாக பாதிக்கப்படும்.
                                        நன்றி !
                                                             அன்புடன் K.S. சுந்தர ராஜன்

No comments:

Post a Comment