Contact

Contact: K.S.SUNDARA RAJAN : (+91 ) 98949 20196

4 Mar 2014

வினாடி 20



பரிகாரம் உண்மையா? 
பகுதி – 1

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,
நமது வாழ்கையில் சில காரியங்கள் நடை பெறுவதில் கால தாமதம் ஏற்படும் பொழுது அல்லது நடக்காமல் இருக்கும் பொழுது, இந்த தடையை நீக்குவதற்கு, அல்லது தோஷங்களை நிவர்த்தி செய்ய நாம் பலவித பரிகாரங்களை செய்து வருகின்றோம். இந்த பரிகாரம் உண்மையா?
“பரிகாரம் இதன் உண்மையான சொல் “மன சாந்தி பரிகாரம் ஆகும். அதாவது மனதை சாந்தி செய்வதே இதன் உண்மையான நோக்கம். ஒரு செயலை நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை தருவதே பரிகாரம் ஆகும். பரிகாரம் செய்தால் உறுதியாக தடைகள் நீங்கி விடுமா என்றால் யாராலும் உத்தரவாதம் தர முடியாது. அனால் பரிகாரம் பொய் என்றும் கூற முடியாது.
உதாரணமாக கிராமத்தில் வசிப்பவர்களிடம் ஒரு நம்பிக்கை உண்டு. அதாவது மருத்துவர் கொடுக்கும் மருந்து, மாத்திரையை விட அவர் போடும் ஊசிக்கு வலிமை அதிகம், ஊசி நோயை உடனே சரிபண்ணிவிடும். இந்த மாதிரி  நம்பிக்கை உடையவர்களுக்கு எத்தனை மருந்து, மாத்திரைகள் கொடுத்தாலும் காய்ச்சல் போகாது. அதே காய்ச்சலுக்கு ஒரு மருத்துவர் வெறும் தண்ணீரை (Distilled Water)  ஊசி என்ற பெயரில் போட்டால் கூட, உடனே அவரது காய்ச்சல் போய்விடும். இது எப்படி சாத்தியம் என்றால், அந்த நோயாளியின் நம்பிக்கை தான். இதே போல்தான் பரிகாரமும். பரிகாரம் செய்தால் பிரச்சனை தீர்ந்து விடும் என்று நம்ப கூடியவர்களுக்கு பரிகாரம் செயல்படும். நம்பிக்கைதான் வாழ்க்கை. நமது பிரச்சனையை கடவுளிடம் கூறினால் கடவுள் சரிபண்ணிவிடுவார் என்பது ஒரு நம்பிக்கை. அதேபோல் பரிகாரம் பிரச்சனையை சரிபண்ணும் என்பதும் நம்பிக்கைத்தான். (It is just a Psychology)
அனால் இன்றைய ஜோதிடர்களுக்கு ஜாதகம் பார்த்து வரும் வருமானம் பத்தவில்லை என்பதால் விதவிதமான பரிகாரங்களை மக்களிடம் திணித்து வருகிறார்கள். இவ்வாறு திணிப்பதால் எந்த பலனும் இல்லை. நாங்கள் எல்லா ஜோதிடர்கள் கூறும் பரிகாரங்களையும் செய்து விட்டோம் இருந்தும் திருமணம் ஆகவில்லை, குழந்தை இல்லை, நோய் சரி ஆகவில்லை என்று புலம்புகிறார்கள், மக்களிடம் பரிகாரத்தின் மேல் ஒரு வெறுப்பும் ஏற்படுகிறது.  எனவே எதாவது பரிகாரம் சொல்லுங்கள் செய்கிறோம் என்று கேட்பவர்களுக்கும், பரிகாரத்தின் மேல் நம்பிக்கை உடையவர்களுக்கு மட்டும் பரிகாரம் கூறுங்கள் தவறு இல்லை.
இந்தியாவில் Psychologist தேவை அதிகம் இல்லை, காரணம் ஜோதிடர்கள் Psychologist வேலையை செய்து விடுகின்றனர் என்பதே எனது கருத்து. நமது வாடிக்கையாளர்களின் பிரச்சனையை ஜோதிடர்கள் காது கொடுத்து கேட்கின்றனர். இவ்வாறு தனது பிரச்சனையை குடும்ப ஜோதிடரிடம் மனம் விட்டு கூறிவிட்டால் மன வலி வேதனை குறைந்து விடுகிறது. அதேபோல் பரிகாரம் தன் நம்பிக்கையையும் தருகிறது. ஒரு ரூபாய் அகல் விளக்கு கூட நம்பிக்கை உடையவர்களுக்கு நல்ல பரிகாரம் தான், பல தடைகளை உடைத்துவிடும்.
எனவே பரிகாரம் என்பது மன பலமே !
                          நன்றி ! அன்புடன் K.S. சுந்தர ராஜன்.

No comments:

Post a Comment