Contact

Contact: K.S.SUNDARA RAJAN : (+91 ) 98949 20196

6 Mar 2014

வினாடி 22



பரிகாரம் பகுதி – 3
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,
ஒரு ஜோதிடர் நல்ல பலன்களை மட்டும் கூறு வருவாரே அனால் வாடிக்கையாளர்கள் பரிகாரம் கேட்பதில்லை. அனால் வர இருக்கும் தீய பலன்களை ஒரு ஜோதிடர் கூறினால் அதை தடுக்க, பரிகாரம் கூறுங்கள் என்று வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக கேட்பார்கள். பரிகாரம் கேட்பவர்களிடம் எப்படி பரிகாரம் ஒன்றும் இல்லை, உன் விதியை வாசித்தேன் அவ்வளவுதான் என்று சொல்ல முடியுமா? சொன்னாலும், வாடிக்கையாளர்கள் விட்டு விடுவார்களா?
மருத்துவரின் வேலை நோயை கண்டுபிடித்து கூறுவது மட்டும் அல்ல, அதற்கு மருந்து கொடுப்பதும் தான். அதேபோல் ஒரு ஜோதிடர் பிரச்சனை வரப்போகிறது என்று சொன்னால் மட்டும் போதாது, அதற்கு நிவர்த்தியும் கூறவேண்டும். இதுவே தொழில் தர்மமும் ஆகும். சரி வாடிக்கையாளரை பிரச்சனையில் இருந்து பரிகாரம் கூறி காப்பாற்ற வேண்டும், இந்த செயல்  எது போன்றது தெரியுமா? ஒருவன் மூட்டையை தூக்க முடியாமல் கஷ்டப்படுகிறான் என வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் இறக்க குணம் அவரை காப்பாற்ற துடிக்கிறது, அவன் முதுகில் இருந்து நீங்கள் அந்த மூட்டையை தூக்கி இறக்கி வைத்தால் தான் அவனை காப்பாற்ற முடியும். ஆக நீங்கள் அந்த மூட்டையின் பாரத்தை சிறுது நேரம் தூக்க வேண்டியது  வரும். இதுதான் நாம் கொடுக்கும் பரிகாரத்தில் உள்ள சிக்கல்.
எனவே ஒரு ஜோதிடர் மற்றவர்களுக்கு பரிகாரம் கூறவேண்டுமானால், முதலில் தனக்குதானே பரிகாரம் செய்து கொள்ளவேண்டும். நெருப்பில் உள்ளவர்களை காப்பாற்ற தீ அணைப்பு வீரர்கள் தற்காப்பு கவசம் அணிந்து கொள்வது போல, ஜோதிடர்களும் தனது தற்காப்புக்கு பரிகாரம் செய்துக்கொள்ள வேண்டும்.
பொதுவாக இயற்கையின் மாற்றங்களை உணரும் சக்தி விலங்கினங்களுக்கும், பறவைகளுக்கும் உண்டு. குறிப்பாக பசு மாடு, யானை, குதிரை, நாய் போன்ற மிருகங்களுக்கு இயற்கையின் மாற்றம் அதிகம் தெரியும். உதாரணமாக 2004 ம் ஆண்டு சுனாமியில் மேற்கண்ட நான்கு மிருகங்களும் இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மிருகங்களுக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஜோதிடர்கள் வெல்லம், அகத்திக்கீரை, வாழைப்பழம் இம்முன்றும் கொடுத்து வந்தால் ஜோதிடருக்கு பிரச்சனை வராது தற்காத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் பரிகாரம் சொல்லும் ஜோதிடருக்கும், அவரது குடும்பதிற்கும் நிச்சயமாக பாதிப்பு வரும், எப்பொழுது வரும் என்றால் ஜோதிடரின் பலவீனமான தசாபுத்தி காலங்களில் வரும்.
இவ்வாறு தனது வாடிக்கையாளர்களுக்கு வரும் துன்பத்தை தனது தனது துன்பமாக கருதும் ஜோதிடர்களை, மக்கள் தெய்வத்திற்கு அடுத்த நிலையில் வைத்து “தெய்வக்ஞன் என அன்போடு அழைகின்றனர்.  
                                                            நன்றி ! அன்புடன் K.S. சுந்தர ராஜன்

No comments:

Post a Comment