Contact

Contact: K.S.SUNDARA RAJAN : (+91 ) 98949 20196

15 Mar 2014

வினாடி - 27



வினாடி – 27
கேள்வி : திருமணமும் தொழிலும்

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,
     இந்த ஜாதகருக்கு நடப்பு ராகு திசையில் சந்திர புத்தி, திசையை நடத்தும் கோள் ராகு, ராகு நின்ற பாவகம் 10, எனவே ஜாதருக்கு நிலையான தொழில் ஏற்பட்டிருக்க வேண்டும். அதன்படி ஜாதகர் சுயமாக Food Products தயாரித்து விற்பனை செய்து வருகிறார். கௌரவமான தொழில். அடுத்து சந்திரன் புத்தி நடக்கிறது சந்திரன் நின்ற பாவகம் 12, லக்னதிருக்கு 12 ம் பாவகம் என்பது ஜாதகரின் ஆரோக்கியத்திற்கு கேடு, அனால் தொழில் ஸ்தானத்திற்கு 3 ம் பாவகமாகும். அதன்படி ஜாதகர் கேட்ட கேள்வி புதிய தொழில் ஆரம்பிக்கலாமா? தாராளமாக செய்யலாம் என்று கூறினேன். காரணம் அடுத்து வரும் செவ்வாயும் 12 ல் உள்ளது. ராகு திசையில் சந்திர புத்தி மற்றும் செவ்வாய் புத்தியில் எவ்வளவு தூரம் செய்யும் தொழிலை விருத்தி செய்ய முடியுமோ அவ்வளவு விருத்தி செய்து கொள்ளுங்கள். அடுத்து வரும் குரு திசை 1 ம் பாவகதில் இருப்பதால் தொழில் விருத்தி என்பது இருக்காது, இருப்பதை கொண்டு சந்தோஷமாக வாழும் மனப்பான்மைக்கு வந்து விடுவீர்கள் என பலன் கூறப்பட்டது.
அடுத்த கேள்வி திருமணம், ராகு தசையும் திருமணதிருக்கு சாதகமாக இல்லை,  அதேபோல் சந்திர புத்தி, அடுத்து வரும் செவ்வாய் புத்தி இவ்விரு புத்திகளும் 12 ம் பாவகத்தை இயக்கம், 12 ம் இயங்கும் பொது திருமணம் செய்வது என்பது கண்டிப்பாக நல்லதல்ல. காரணம் ஜாதகர் மற்றும் துணை இருவருக்கும் இது தீய அமைப்பு ஆகும். என்ன பலன் நடக்கும் என்று கேட்டார் மனைவியின் ஆதிக்கம் அதிகம் காணப்படும், அதனால் ஜாதகர் மனைவியை பிரிய நேரிடும் என கூறினேன். எதாவது பரிகாரம் செய்து திருமணம் செய்யலாமா என கேட்டார். பரிகாரம் பெண்ணுக்கு திசையும் அடுத்து வரும் புத்திகளும் ஒற்றைப்படை ஆக இருந்தால் பார்த்து செய்யலாம் என பலன் கூறி அனுப்பி வைத்தேன். இரட்டை படை தசா புத்திகளில் திருமணம் செய்ய கூடாது என்பது பெரியவர்களின் வாக்கு.
                      நன்றி !
                             அன்புடன் K.S. சுந்தர ராஜன்

No comments:

Post a Comment