Contact

Contact: K.S.SUNDARA RAJAN : (+91 ) 98949 20196

28 Mar 2014

வினாடி - 30



ஜோதிடம் என்பது கலையா அல்லது அறிவியலா?

ஜோதிடம் என்பது கலையா அல்லது அறிவியலா என்ற கேள்விக்கு ஒரே பதில் வந்து இருந்தால், ஜோதிடம் அறிவியல் ஆகி இருக்கும். ஜோதிடம் அறிவியல் என்று ஆகி விட்டால், இன்றைய அறிவியல் உலகத்தில் ஒரு குழந்தை பிறந்த அன்றே அக்குழந்தைக்கு ஆயுள் முடியும் வரை நடக்க இருக்கும் பலன்களை கணணி கொடுத்துவிடும். பிறகு ஜோதிடர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும்.
ஜோதிடம் கண்டிப்பாக அறிவியல் இல்லை. வான சாஸ்திரம் அறிவியல், வான சாஸ்திரதின் கோள்நிலையை ஜோதிடம் கையில் எடுத்துக் கொண்டதினால் ஜோதிடம் அறிவியல் ஆகிவிடாது. ஒரே நொடியில், ஒரே மருத்துவமனையில், இரு வேறுபட்ட தாய்மார்களுக்கு, இரு வேறுபட்ட அந்தஸ்துகளுடன், குழந்தைகள் பிறக்கின்றன. நாம் இதனை நேரடி ஒளிபரப்பு வசதியுடன் பார்க்கவும் முடியும். ஒரு குழந்தையின் தகப்பனார் கோடீஸ்வரன் மற்றொரு குழந்தையின் தகப்பனார் கூலி. உலகம் முழுவதும் பின்பற்றப்படும் எந்த முறைகளில் கணித்தாலும் இரு குழந்தைகளுக்கும் ஒரே ஜாதகம்தான் வரும். அனால் பலன்கள் கண்டிப்பாக மாறுபடும்.
ஒரே ஆசிரியரிடம் படித்த 10 மாணவர்களிடம் ஒரு குழந்தை பிறந்த நேரத்தை கொடுத்து பலன் பார்க்க சொன்னால், Time Rectification என்ற பெயரில் 10 மாணவர்களும், 10 விதமான நேரங்களில், 10 விதமான பலன்கள் கூறுவார்கள். சஷ்டியாம்சதில் மாறிவிடும், Sub Lord, Sub-Sub Lord, Sub-Sub-Sub Lord மாறிவிடும் என கணிதத்தில் வேண்டுமானால் வேறுபாடு காண்பிக்கலாம், அனால் ஜாதகம் பார்க்க வருகின்றவன் தோற்றத்தை பார்க்காமல் நம்மால் பலன் கூற முடியாது. இதைத்தான் நம் முன்னோர்கள் கால, தேச, வர்த்த மானம், ஜாதி, மத, நிற பேதம், சுருதி, யுக்தி, அனுபவத்துடன் ஜோதிடம் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்கள். இதில் அனுபவம் வாய்ந்த ஜோதிடர்கள் தவறான ஜாதகத்தை கொடுத்தாலும் சரியான பலன் கூறிவிடுவார்கள்.
இராசி கட்டத்தை வைத்தே ஒழுங்காக பலன் கூற முடியவில்லை அவ்வளவு குழப்பம் இருக்கிறது, இதில் சஷ்டியாம்சத்தை வைத்து என்ன பலன் உருப்படியாக கூறமுடியும்? நல்ல பலன் என்றால் குரு பார்க்கிறது என்றும் கேட்ட பலன் என்றால் சனி பார்க்கிறது என்றும் சமாளித்து வருகிறோம் என்பதே நிதர்சனமான உண்மை. பல சந்தர்பங்களில் ஜோதிடம் பார்கிறவர்களுக்கே ஜோதிடம் உண்மைதானா என சந்தேகம் வரும். ஒரு சில இடங்களில் ஜோதிடம் உண்மையாக இருக்கிறது, அனால் பல இடங்களில் ஜோதிடம் நம் காலை வாரி விடுகிறது. நாம் முழுமையாக கற்றுக் கொள்ளவில்லை, ஜோதிடம் கடல் போன்றது என்று நாம் நம்மை தேற்றி கொள்ளவேண்டியது தான். எல்லா ஜோதிட நூல்களையும் படித்தால் பைத்தியம் பிடித்து விடும், அவ்வளவு முரண்பாடுகள் உள்ளது. சரி எல்லா ஜோதிட நூல்களையும் படித்து அதன் பின்னர் பலன் கூறலாம் என்றால் எத்தனை ஆண்டுகள் படிப்பது, அதற்குள் ஆயுள் முடிந்துவிடும். ஜோதிடம் பார்ப்பது எவ்வளவு சிரமம் என்று ஒரு ஜோதிடனுக்கு தான் தெரியும்.
இந்த நிலையில் பெருமைக்காக பல பட்டங்களையும் நம் பெயருக்கு முன்னும் பின்னும் போட்டுக் கொள்கிறோம். என்னை கேட்டால் ஜோதிடர் என்று சொல்லி கொள்ளவே தகுதி இல்லை. ஜோதிடத்தை உண்மையாகவே மனசாட்சியின் படி ஒருவர் முனைவர் பட்ட படிப்பில் ஆய்வு செய்தால், கண்டிப்பாக ஜோதிடம் பொய் என்றுதான் வரும். ஏன் என்றால் ஒரே ஒரு விதியை கூட அனைவருக்கும் பொருந்தும் வண்ணம் அடித்து கூற முடியாது.
“இருட்டு அறையில், இல்லாத கருப்பு பூனையை தேடுவது போல் உள்ளது ஜோதிடம்  ஜோதிடம் சொல்ல சரியான கருவிகள் நமது கைகளில் இல்லையே என்ற ஆதங்கத்துடன் - K.S. சுந்தர ராஜன்.

2 comments: